×

அறிவியல் கண்காட்சியில் அரசு மகளிர் பள்ளி மாணவிகள் சாதனை

தேன்கனிக்கோட்டை, நவ.5:  அறிவியல் கண்காட்சியில், மாநில அளவில் முதலிடம் பிடித்து கெலமங்கலம்  அரசு மகளிர் பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனர். தேன்கனிக்கோட்டை தாலுகா கெலமங்கலம் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் ஆஷா, சர்மிளா ஆகியோர் வழிகாட்டி ஆசிரியர் திம்மப்பா தலைமையில் கரூரில் மாநில அளவிலான 47வது ஜவஹர்லால்நேரு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.இதில் அறிவியல், தொழில்நுட்பம் அழியாமல் நிலைத்து நிற்கும் விவசாய பயிர்முறைகள் என்ற தலைப்பில் வாழை மர விவசாயம் தலைப்பில் கண்காட்சியை அமைத்திருந்தனர்.

32 மாவட்டங்கள் பங்கு பெற்ற கண்காட்சியில் கெலமங்கலம் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் ஆஷா மற்றும் சர்மிளாவிற்கு முதல் பரிசு மற்றும் இளம் விஞ்ஞானி விருது வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து சாதனை படைத்த மாணவிகள் ஆஷா, சர்மிளா மற்றும் வழிகாட்டி ஆசிரியர் திம்மப்பா ஆகியோரை பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலளார் பிரதீப்யாதவ், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஷ்வரி, பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி மற்றும் இருபால் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags : Girls School Students Achievement in Science Exhibition ,
× RELATED சூதாடிய 3 பேர் கைது