நாளை கேங்மேன் பணிக்கு தேர்வு

சிவகங்கை, டிச.5: கேங் மேன் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதி தேர்வு டிச.6ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் பாலசுப்பிரமணியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: காளையார்கோவிலில் தொண்டி ரோட்டில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக துணை மின் நிலையத்தில் கேங்மேன்(பயிற்சி) பணிக்கு டிச.2 முதல் டிச.5ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதி தேர்வு மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நாட்களில் தேர்விற்கு ஒதுக்கப்பட்டிருந்த நபர்களுக்கு தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். டிச.6ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதி தேர்வு நடைபெறும் என ஒதுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மழை இல்லாத பட்சத்தில் டிச.6ம் தேதி அன்றே தேர்வு நடைபெறும். இது தொடர்பான கூடுதல் விபரங்களை www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED கேங்மேன் பணி நியமன முறைகேடு சிபிஐ விசாரணை கோரி ஐகோர்ட்டில் வழக்கு