குண்டும் குழியுமாக இருந்த கழனிவாசல் சாலை சீரமைப்பு மக்கள் நிம்மதி

காரைக்குடி, டிச.5: காரைக்குடி கழனிவாசல் சாலை தினகரன் செய்தி எதிரெலிாக சீரமைக்கப்பட்டு வருகிறது. காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் தற்போது பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருவதால் கழனிவாசல் வாட்டர் டேங் சாலை சந்திப்பு மிகவும் மோசமாக வாகனங்களை ஓட்டுவதற்கு லாயக்கற்ற நிலையில் காணப்பட்டது. இது குறித்து தினகரனில் புகைபடத்துடன் “வாகன ஓட்டிகளை கதறவிடும் கழனிவாசல் சாலை” என்ற தலைப்பில் செய்தி வெளியானது.

இச்செய்தி சமூக வலைதளங்களிலும் வைராலாக பரவியது. இதை தொடர்ந்து நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையினர் நேற்று கழனிவாசல் சந்திப்பு முதல் வாட்டர் டேங் சாலை வரை சீரமைத்து புதிய சாலை போட்டு வருகின்றனர். பல ஆண்டுகளாக குண்டும், குழியுமான சாலை தினகரன் செய்தி எதிரொலியால் புத்துயிர் பெற்றது என மக்கள் தெரிவித்தனர்.

Tags : dirt road ,
× RELATED வெங்கமேடு காவல் நிலையத்திற்கு...