4 ஆண்டுக்கு பின்நிரம்பும் கண்மாய்

இளையான்குடி, டிச.5: தொடர் மழை காரணமாக இளையான்குடியில் 4 ஆண்டுகளுக்கு பிறகு கண்மாய், குளங்கள் நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இளையான்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கண்மாய்கள், குளங்கள் ஓரளவிற்கு நிறைந்துள்ளன. பருவமழையின் கருனையால் நீர்நிலைகளில் ஏற்கனவே உயிர்வாழ்ந்த மீன்கள், நத்தைகள், தவளைகள், மண்புழுக்கள் மீண்டும் உயிர்பெற்று பெருக ஆரம்பித்துள்ளது. அவ்வாறு உயிர்பெற்ற மீன்கள் கண்மாய் நீரில் மடைகளின் வழியாக வாய்க்கால்களில் செல்கின்றன.

Tags :
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் முறைகேடு செய்த வழக்கில் மேலும் 4 பேர் கைது