×

விழிப்புணர்வு நாடகம்

திருப்புத்தூர், டிச.5:  சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு, கள்ளச்சாராயம் மற்றும் மது குடிப்பதனால் ஏற்படும் தீமைகள் மற்றும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், திருச்சியைச் சேர்ந்த தமிழ்தாய் நாடக மன்றம் சார்பில், திருப்புத்தூர் பஸ் ஸ்டாண்டில் நாடக, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பறையாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் மற்றும் தெம்மாங்கு பாடல்கள் மூலமாகவும், நாடகம் மூலமாகவும் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சுவது சட்டப்படி குற்றம் என்பதையும் மக்களுக்கு கலை நிகழ்ச்சி மூலம் புரிய வைத்தனர். கள்ளச்சாராயம் காய்ச்சுவதால் சிறைத் தண்டனை அனுபவிக்கும் நபர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் தகவல்களும் இந்த கலை நிகழ்ச்சி மூலம் தெரிவிக்கப்பட்டது.

Tags :
× RELATED பெண் சிசுக்கொலை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நாடகம்