×

அறிவியல் இயக்க ஓவியப்போட்டி

சிவகங்கை, டிச.5: சிவகங்கையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் குழந்தைகள் தின ஓவியப் போட்டி நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கரசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சாஸ்தாசுந்தரம் முன்னிலை வகித்தார். குழந்தைகள் நல அலுவலர் ராமச்சந்திரன் வரவேற்றார். இயற்கை காட்சி என்ற தலைப்பில் நடந்த ஓவியப் போட்டியில் மாணவர்கள் நிஷாந்த், கோடீஸ்வரன், கவியரசு ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். ஏவுகணை என்ற தலைப்பில் நடந்த ஓவியப் போட்டியில் மாணவிகள் தீபிகா, சரண்யா, மோகனா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். யோகிதா, சிவஸ்ரீ ஆகிய மாணவிகள் ஆறுதல் பரிசு பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. கல்பனா சாவ்லா துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் ஆண்டாள் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் டெலஸ்கோப் பயிற்சியாளர் சரவணபாண்டி மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED கண்மாய் நிரம்பியது