மாவட்டம் முழுவதும் 3,691 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல்

சாயல்குடி, டிச.5:  உள்ளாட்சி தேர்தலையொட்டி ராமநாதபுரத்தில் அரசு அலுவலர்களுக்கு பயிற்சி நடந்தது. ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தேர்தல் நடவடிக்கைகள் குறித்த பயிற்சி கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நேற்று நடந்தது. அப்போது அவர் கூறும்போது, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகளில் மொத்தம் 3,691 பதவி இடங்கள் நிரப்பிட நேரடி தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் முதற்கட்டமாக 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 8 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 81 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 168 கிராம ஊராட்சி தலைவர், 1,290 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு டிசம்பர் 27ம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறும்.
இரண்டாம் கட்டத்தில் 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 9 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 89 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 261 கிராம ஊராட்சி தலைவர்கள், 1,785 கிராம ஊராட்சி வார்டு பதவியிடங்களுக்கு டிச.30ம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறும்.
மாவட்டத்தில் உள்ள 1,819 வாக்குச்சாவடி மையங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவில் 813 வாக்குச்சாவடிகளிலும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 1,006 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

Tags : Elections ,district ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் நிறுத்தி...