×

மாவட்டத்தின் பல பகுதியில் எடைக்கற்களால் தினமும் ஏமாற்றப்படும் நுகர்வோர்

தொண்டி, டிச.5:   மாவட்டத்தில் நகர் மற்றும் கிராமங்களில் சிறிய, பெரிய அளவிலான கடைகளில் வியாபாரம் செய்யப்படுகிறது. சிறிய அளவில் சாலையோரத்தில் முழுநேரம் அல்லது காலை, மாலை நேரத்தில் மட்டும் விற்பனை செய்ய கூடிய பெட்டிக் கடைகள், நடமாடும் தள்ளுவண்டி கடைகள் தொண்டி, பரமக்குடி, கமுதி, ராமநாதபுரம் என நகர் பகுதியில் அதிகரித்து வருகிறது. பொதுவாக சாலையோர காய்கறி கடைகளில் பொருள்களை கூறு போட்டு விற்பனை செய்கின்றனர். பெட்டிக்கடைகளில் ஒரு பொருளை எடை போட்டு விற்பனை செய்ய தொழிலாளர் துறையின் அனுமதியுடன் தராசு, எடை கற்களில் முத்திரை பதிக்கப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் ராமநாதபுரம் நகரில் பல கடைகளில் அனுமதி பெறாமல் எடைகற்களை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இத்தகையை தராசுகளை பயன்படுத்தும் கடை உரிமையார்கள் மீது தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நுகர்வோர் தெரிவித்துள்ளனர். இதுபோல் தவறு செய்யும் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையோரத்தில் பெரிய அளவில் காய்கறி, பொருள்கள் விற்பனை செய்யும் சில கடைக்காரர்கள் தராசை சாய்வாக வைத்து எடைபோட்டு ஏமாற்றுகின்றனர். இது பல நுகர்வோருக்கு தெரிவதில்லை. ஆனால் பொருட்களை ஒரு வாங்கி செல்லும் நுவர்வோர் அதில் எடை குறைந்திருப்பது தெரிவதில்லை.

அப்படியே கண்டு பிடித்து வாடிக்கையாளர்கள் தட்டிக் கேட்டால் எல்லாம் சரியாதான் இருக்கு, என அனுப்பி விடுகின்றனர். எலக்ட்ரானிக் தராசு வந்த நிலையிலும் பல கடைகளில் எடை கற்களை வைத்தும் 50 முதல் 100 கிராம் வரை சின்ன கற்களை வைத்து எடை போடுகின்றனர். பலர் துருப்பிடித்த நிலையில் உள்ள தராசுகளை வைத்து எடை போடும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். வாடிக்கையாளர்களின் அவசரத்தை பயன்படுத்தி சிறிய, பெரிய கடைகள் எடையில் மோசடி செய்து வருகின்றனர். இதுபற்றி நுகர்வோர் ஆனந்த் கூறுகையில், காய்கறி கடைகளில் பெரும்பாலும் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுகின்றனர். பலசரக்கு பொருட்களை ஒரு கடையில் வாங்கி வேறு கடையில் எடை போட்டால் எடை குறைவாக உள்ளது என்றார்.

Tags : Consumers ,weightlifters ,district ,parts ,
× RELATED மலை மாவட்ட சிறு விவசாய சங்கத்தினர்...