அரூர் அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வலியுறுத்தல்

அரூர், நவ.5: அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விளையாட்டு மைதானம் உள்ளது. இதில், காலை மற்றும் மாலை நேரங்களில், சுற்று வட்டாரத்தை 1000க்கும் மேற்பட்டோர் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ள வந்து செல்கின்றனர். மேலும் பள்ளி நேரம் முடிந்து பள்ளி, கல்லூரி மாணவர்களும் விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அரூர் பகுதியில் பெய்த மழையால், விளையாட்டு மைதானம் முழுவதும் செடிகள் வளர்ந்து புதர் மண்டிய நிலையில் உள்ளது. இதனால் நடைபயிற்சி மேற்ெகாள்வோர் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே விளையாட்டு மைதானத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி, மைதானத்தை சீரமைக்க ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Aurora Government School Playground ,
× RELATED நல்லம்பள்ளி- லளிகம் வழியில் சாலையோர பள்ளங்களை சீரமைக்க வலியுறுத்தல்