×

பட்டகப்பட்டியில் 3 ஆண்டாக பயன்பாட்டிற்கு வராத அங்கன்வாடி மையம்

நல்லம்பள்ளி, நவ.5: நல்லம்பள்ளி அருகே பட்டகப்பட்டியில் பயன்பாடின்றி இருக்கும் அங்கன்வாடி ைமயத்தை திறக்க ேவண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நல்லம்பள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட பட்டகப்பட்டி கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த குழந்தைகளுக்காக, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ₹6.75லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.ஆனால் அங்கன்வாடி மையம் திறக்கப்படாமல் பூட்டிய நிலையிலேயே உள்ளது. இந்நிலையில், பயன்பாடின்றி கட்டிடம் உள்ளதால், செடிகள் வளர்ந்தும், கட்டிடம் விரிசல் விட்ட நிலையிலும் உள்ளது. எனவே கட்டிடத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு, அங்கன்வாடி மையத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : center ,
× RELATED தென் தமிழகம் மற்றும் கடலோர...