உள்ளாட்சி தேர்தலையொட்டி திருமங்கலம் ஒன்றியத்தில் 169 வாக்குசாவடி மையங்கள்

திருமங்கலம், டிச. 5: உள்ளாட்சி தேர்தலுக்கு திருமங்கலம் ஒன்றியத்தில் 169 வாக்குசாவடிமையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருமங்கலம் ஒன்றியத்தில் அதற்குரிய பணிகள் துவங்கியுள்ளன. இந்த ஒன்றியம் செக்காணூரணி அருகேயுள்ள கொக்குளத்தில் துவங்கி சேடபட்டி அருகேயுள்ள மதிப்பனூர் வரையில் பரந்து விரிந்துள்ளது. ஒன்றிய ஆணையாளராக இருந்த சூரியகாந்தி மதுரை மேற்கு ஒன்றியத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். திருமங்கலம் ஒன்றியத்தில் கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த உதயகுமார் ஆணையாளராக பணி மாறுதல் செய்யப்பட்டார். சங்கர்கணேஷ் திருமங்கலம் ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகளின் வட்டார வளர்ச்சி அலுவலராக பொறுப்பேற்று கொண்டார். இந்த ஒன்றியத்தில் மொத்தம் 38 ஊராட்சிகள் அமைந்துள்ளன.

இவற்றில் ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் மற்றும் 38 ஊராட்சிகளிலும் தலைவர் வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. திருமங்கலம் ஒன்றியத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 85 ஆயிரத்து 871 ஆகும். இதில் ஆண்வாக்காளர்கள் எண்ணிக்கை 42 ஆயிரத்து 28, பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 43 ஆயிரத்து 841 ஆகவும் உள்ளது. இரண்டு இதர வாக்காளர்கள் உள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் இந்த வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 169 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Related Stories: