×

ஈச்சம்பட்டி பகுதியில் உயிர்பலிக்கு காத்திருக்கும் திறந்த வெளி கிணறு

ல்லம்பள்ளி, நவ.5: நல்லம்பள்ளி அருகே ஈச்சம்பட்டி பகுதியில் திறந்த வெளி கிணற்றுக்கு இரும்பு கேட் அமைக்க ேவண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஈச்சம்பட்டி கோயில் அருகே பொதுக்கிணறு உள்ளது. இந்த கிணற்றை சுற்றிலும் குப்பை கழிவுகளை கொட்டுவதால் பயன்பாடின்றி காணப்படுகிறது. இந்நிலையில், கிணற்றுக்கு அருகில் குடியிருப்புகள் அதிகம் உள்ளதால், அப்பகுதியில் விளையாடும் குழந்தைகள் கிணற்றில் தவறி விழுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. எனவே, திறந்த வெளி கிணற்றுக்கு இரும்பு கேட் அமைக்க வேண்டும். கிணற்றை தூர் வாரி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : area ,Ichampatti ,well ,
× RELATED டெல்டா பகுதியை தேசிய பேரிடராக அறிவித்து