மேலூர் அருகே அம்மன் கோயிலில் பூத்தட்டு திருவிழா

மேலூர், டிச. 5: மேலூர் அருகே கார்த்திகை மாதத்தை முன்னிட்டு அம்மன் கோயிலில் பூத்தட்டு திருவிழா நேற்று நடைபெற்றது. மேலூர் அருகே சருகுவலையபட்டியில் உள்ளது வீரகாளியம்மன் கோயில். ஆண்டு தோறும் இக்கோயிலில் கார்த்திகை மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். நேற்று இக் கோயில் திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பெண்கள் தங்கள் கைகளில் பூக்களை அடுக்கிய தட்டுக்களை ஏந்தியவாறு மந்தையில் இருந்து கோயிலுக்கு 3 கிமீ. தூரம் ஊர்வலமாக நடந்து சென்றனர். பெண் பக்தர்களால் கொண்டு வரப்பட்ட பூக்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்பட்டது. இத்துடன் பலரும் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்று தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். திருவிழாவில் சருகுவலையபட்டியை சுற்றி உள்ள பல்வேறு கிராம மக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: