×

கஞ்சா விற்ற 2 பேர் கைது

அலங்காநல்லூர், டிச. 5: அலங்காநல்லூர் அருகே கஞ்சா விற்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். அலங்காநல்லூர் அருகே அரியூர் ராஜா (23), கோவில்பாப்பாகுடி பிரபாகரன் (19) ஆகிய இருவரும் அந்தப் பகுதியில் கஞ்சா விற்பதாக அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது இருவரும் கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED 1 கிலோ கஞ்சாவுடன் 2 பெண்கள் கைது