எம்.வி.எம்.கலைவாணி பள்ளியில் கண் சிகிச்சை முகாம்

சோழவந்தான், டிச. 5: சோழவந்தான் எம்.வி.எம். கலைவாணி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மற்றும் மதுரை வாசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் டாக்டர் மருதுபாண்டியன் தலைமை வகித்தார். முதல்வர் விஜயா முன்னிலை வகித்தார். முகாம் ஒருங்கிணைப்பாளர் கதிரவன் வரவேற்றார். இதையடுத்து மருத்துவ குழுவினர் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு தாளாளர் சார்பில் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.

Related Stories:

>