சேலத்தில் வரும் 6, 7ம் தேதி இலவச நீரிழிவு, கால் நரம்பு பரிசோதனை முகாம்

சேலம், டிச.5:  சேலம் 4 ரோடு முனியப்பன் கோயில் அருகில் சர்க்கரை நோய், கால் பாதம் கிளினிக் மற்றும் தைராய்டு ஹார்மோன்கள் கிளினிக் தொடக்க விழா நாளை (6ம்தேதி) நடக்கிறது. இதையொட்டி இலவச மருத்துவ முகாம், நாளை (6ம் தேதி) மற்றும் 7ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. இதில் கால் எரிச்சல், கால் பாதம் வலி, சுரீர் என குத்துவது போல் இருத்தல், சில்லிப்பு, திடீரென்று சூடாவது, கால்விரல் இடுக்கில் புண், மெத்தென்று பஞ்சுமேல் நடப்பது போல் இருத்தல், கால் தரையில் நடந்தால் உணர்ச்சி தெரியாமல் இருத்தல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் பரிசோதித்து கொள்ளவும். மேலும், உயர் ரத்த அழுத்த பரிசோதனையும் செய்யப்படுகிறது என சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் எம்.ஜி. வெங்கடேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories:

>