×

தற்கொலை கடிதம் வைத்து விட்டு மாயமான தம்பதி

சேலம், டிச. 5: சேலம் உடையாப்பட்டி கந்தாஸ்ரமம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் நாகராஜ்(30). கார் டீலிங் தொழில் செய்து வந்தார். இவருக்கு சாந்தி(29) என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். கடந்த மாதம் 12ம் தேதி கோவிலுக்கு செல்வதாக தந்தை கந்தசாமியிடம் கூறிவிட்டு, மனைவி சாந்தியுடன் நாகராஜ் வெளியே சென்றார். அதன்பிறகு இருவரும் வீடு திரும்பவில்லை. அவரது படுக்கை அறையின் தலையணையின் கீழ் பகுதியில் கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில், கடன் ெதால்லை அதிகரித்து விட்டது. சிறிது அடைத்தாலும் அதிகரித்து வருகிறது. எனவே மனைவியுடன் சாகப்போகிறேன். எனது குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்ளவும் என கூறப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கந்தசாமி, அம்மாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாயமான தம்பதியினரின் செல்போனை வைத்து விசாரித்ததில், அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் இருப்பதையும், பின்னர், அவர்கள் அங்கிருந்து கேரளாவில் இருப்பதும் தெரிந்துள்ளது. இதையடுத்து தம்பதியினரை தேடி போலீசார் கேளராவுக்கு விரைந்துள்ளனர்.  

Tags :
× RELATED மதுராந்தகம் அருகே சோகம் வாகன விபத்தில் தம்பதி பலி