ஒட்டன்சத்திரம் அருகே அரசு பள்ளியில் குழித்தட்டு நாற்றங்கால் செயல்விளக்க முகாம்

ஒட்டன்சத்திரம், டிச. 5: ஒட்டன்சத்திரம் அருகே முத்துநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு குழித்தட்டு நாற்றங்கால் வளர்க்கும் செயல்விளக்க முகாம் நடைபெற்றது. மதுரை வேளாண் கல்லூரி சார்பில் நடந்த இந்த முகாமிற்கு பள்ளி தலைமையாசிரியர் சிங்கராயன், அறிவியல் ஆசிரியர் இளங்கோ தலைமை வகத்தனர். முகாமில் 11, 12ம் வகுப்புகளில் அறிவியல் பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு குழித்தட்டு முறையில் நாற்றுகள் வளர்க்கும் முறை பற்றியும், அதன் நன்மைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. வேளாண் கல்லூரி இளங்கலை 4ம் ஆண்டு மாணவிகள் தர்ஷினி பிரியா, திவ்யா, இலக்கியா, கவுரி, மன்மிதா, கீதாப்பிரியா, கோபிகா, கவுரி கார்த்திகா ஆகியோர் செயல்விளக்கம் அளித்தனர்.

Tags : Government School ,Kuttiyattu Nursery Demonstration Camp ,
× RELATED அரசு பள்ளியில் அதிர்ச்சி சம்பவம் மரம்...