×

கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் துவங்கியது

கொடைக்கானல், டிச. 5: கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் துவங்கியதையொட்டி ஸ்டார்கள், குடில்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் கடவுளான இயேசு கிறிஸ்து இந்த டிசம்பர் மாதம் 25ம் நாளில் பிறந்தார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு கிறிஸ்து பிறந்த இந்த நாளை கிறிஸ்துமஸ் விழாவாக கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த விழாவின் தொடக்கமாக ஒவ்வொரு கிறிஸ்தவர்களின் வீடுகளிலும் கிறிஸ்துவை வரவேற்கும் விதமாக நட்சத்திர வடிவிலான ஸ்டார்களை ஏற்றுவர். மேலும் கிறிஸ்துமஸ் மரங்களையும் அமைத்து இயேசு கிறிஸ்து பிறப்பினை விளக்கும் விதமாக குடில்களை அமைத்து வழிபட்டு வருவர்.
அதன்படி கொடைக்கானலில் தற்போது கிறிஸ்துமஸ் ஸ்டார்கள், குடில்கள் விற்பனை களைகட்டியுள்ளது. மேலும் இந்த டிசம்பர் மாதம் முழுவதும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது மற்ற பிரிந்த சபை கிறிஸ்தவர்களும் அந்தந்த ஆலயங்களில் இருந்து கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து அருட் தந்தையர்கள், இளைஞர் அமைப்பினர், குருக்கள் அந்தந்த பகுதியில் உள்ள கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கு சென்று கிறிஸ்து பிறப்பின் மகிமையை எடுத்துரைத்து ஜெபம் செய்து வருகின்றனர். இதற்கு கிறிஸ்துமஸ் கேரள்ஸ் என கூறப்படும். கொடைக்கானலில் தற்போது அனைத்து பகுதிகளிலும் இந்த கிறிஸ்துமஸ் கேரல் சுற்று நடைபெற்று வருகிறது.

Tags : celebrations ,Kodaikanal ,
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...