ஊரக உள்ளாட்சி தேர்லையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்

சேலம், டிச.5:  சேலம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலையொட்டி தேர்தல் நடத்தும் அனைத்து அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ராமன் தலைமை வகித்தார். அவர் கூட்டத்தில் பேசியதாவது: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்கள் நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன்படி, சேலம் மாவட்டத்தில் 29 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 20 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 288 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 385 கிராம ஊராட்சிமன்றத் தலைவர்களுக்கும் மற்றும் 3,597 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களும் சாதாரண தேர்தல்கள் வரும் டிசம்பர் 27ம், 30ம் ஆகிய இரண்டு நாட்களில் இரண்டு கட்டங்களாக நடக்கின்றன. இத்தேர்தலில் மொத்தம் 8,11,461 ஆண் வாக்காளர்களும், 7,93,276 பெண் வாக்காளர்களும்52 இதர வாக்காளர்களும் என மொத்தம் 16,04,789 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளன. சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சாதாரண தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக ஆண்களுக்கு 43 வாக்குச்சாவடிகளும், பெண்களுக்கு  43 வாக்குச்சாவடிகளும், ஆண் மற்றும் பெண் வாக்காளர்களுக்கான 2,655 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சாதாரண தேர்தலுக்காக 2,741 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்கள் நடத்தும்அலுவலர்கள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் தேர்தல் நடத்தை விதிமுறைகளைமுழுமையாக கடைபிடிக்க வேண்டும். மேலும், தேர்தல் நடைமுறைகளான தேர்தல் அறிவிப்புவெளியிடுதல், வேட்பு மனுக்களை பெறுதல், வேட்புமனுக்களை பரிசீலனை செய்தல், இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியிடுதல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தமிழ்நாடு தேர்தல்ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். மேலும், வாக்குப்பதிவிற்கான தேர்தல் அலுவலரை நியமனம் செய்தல், வாக்கு எண்ணும் பணிக்கு தேர்தல் அலுவலர் நியமனம் செய்தல் வாக்கு எண்ணிக்கை பணி உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றி மேற்கொள்ள வேண்டும்.ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்கள் வாக்குப்பதிவிற்கு அந்தந்த வாக்குச்சாவடிகளை நேரில் பார்வையிட்டு குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் முழுமையாக இருக்கின்றதா என்பதை ஆய்வு செய்யவேண்டும். மேலும், வாக்குப்பதிவிற்கு தேவையான வாக்காளர் பட்டியல்களை தயார் நிலையில் வைத்தல், வாக்கு பெட்டிகளை சரிபார்த்தல், வாக்கு எண்ணும் மையத்தை நேரில் பார்வையிட்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு அனைத்து வசதிகளும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>