ஒட்டன்சத்திரம் அருகே சாலை பணி பள்ளத்தில் கவிழ்ந்து வாலிபர் பலி

ஒட்டன்சத்திரம், டிச. 5: ஒட்டன்சத்திரம் அருகே சாலை பணிக்காக தோண்டிய பள்ளத்தில் டூவீலர் கவிழ்ந்து வாலிபர் பலியானார். வேடசந்தூர் அடுத்த நடுபட்டியை காலனியை சேர்ந்த தங்கவேல் மகன் தினேஷ்குமார்(21). இவர் நேற்று முன்தினம் இரவு தனது இருசக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரம்- வேடசந்தூர் சாலையில் கேதையுறும் பிரிவு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது சாலை அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் டூவீலருடன் தவறி விழுந்தார்.  இதில் பலத்த காயமடைந்த தினேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>