நிலக்கோட்டை மகளிர் கல்லூரியில் எய்ட்ஸ் தின விழிப்புணர்வு

வத்தலக்குண்டு, டிச. 5: நிலக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் வத்தலக்குண்டு தீபம் அறக்கட்டளை, நத்தம் மெர்ட்ஸ் நிறுவனம், அரசு மகளிர் கல்லூரி இணைந்து உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். தீபம் அறக்கட்டளை இயக்குனர் பிலிஸ் தலைமை வகித்தார். பணியாளர் சுதா வரவேற்றார். மெர்ட்ஸ் நிர்வாக இயக்குனர் சந்திரசேகரன், கல்லூரி முதல்வர் சீனிவாசன் ஆகியோர் பேசினர். இதில் செவிலியர் பயிற்சி பள்ளி சகோதரிகள் பிரீடா, கிளாடின் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாணவிகள் மனிதசங்கிலி வழியாக எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பினர். கல்லூரி மாணவி ராக்கு நன்றி கூறினார்.

Related Stories:

>