கொடைக்கானலில் 2 மாதத்திற்கு பின் பியர் சோழா அருவி திறப்பு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கொடைக்கானல், டிச. 5: கொடைக்கானலில் 2 மாதத்திற்கு பின் பியர் சோழா அருவி திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கொடைக்கானல் அருகே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது கரடி சோலை நீர்வீழ்ச்சி எனும் பியர் சோழா அருவி. வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதாக கூறி கடந்த 2 மாதங்களாக இந்த நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இதன் நுழைவுவாயில் வனத்துறையினரால் மூடப்பட்டது.
Advertising
Advertising

இதனால் கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் இந்த நீர்வீழ்ச்சியை காண முடியாமல் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் வனவிலங்குகள் இப்பகுதியை விட்டு தற்போது வேறு பகுதிக்கு சென்று விட்டதாக கூறி நேற்று முன்தினம் மாலை முதல் நீர்வீழ்ச்சி நுழைவுவாயிலை வனத்துறையினர் திறந்து விட்டனர். 2 மாதங்களுக்கு பின் கரடி சோலை நீர்வீழ்ச்சி திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தற்போது தொடர்மழையால் இந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதை காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

Related Stories: