இடைப்பாடி சுற்றுவட்டாரத்தில் சின்ன வெங்காய அறுவடை துவக்கம்

சேலம், டிச.5:  இடைப்பாடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள், சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் சின்னவெங்காயம் பயிரிட்டுள்ளனர். மேட்டூர் கிழக்கு கால்வாயில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு மற்றும் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக வெங்காய செடிகள் செழித்து வளர்ந்து, தற்போது அறுவடைக்கு தயாராகி உள்ளது. தொடர் மழை காரணமாக வடமாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் வரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது மார்க்கெட்டில் சின்ன மற்றும் பெரிய வெங்காயத்தின் தேவை அதிகரித்து விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கிலோ ₹100 முதல் ₹180 வரை மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் இடைப்பாடி சுற்றுவட்டாரத்தில் சின்ன வெங்காயம் பயிரிட்டுள்ள விவசாயிகள் அறுவடை பணிகளை துவக்கி உள்ளனர். தேவை அதிகரித்து விலையும் உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் நேரடியாக விவசாயிகளை சந்தித்து மொத்தமாக சின்ன வெங்காயத்தை கொள்முதல் செய்து வருகின்றனர். அவர்கள் ஒரு கலோ சின்ன வெங்காயத்தை ₹70 முதல் ₹80 வரை வாங்கிச்செல்கின்றனர். மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் (புதிது) கிலோ ₹110 முதல் ₹140 வரை விற்பனை செய்து வருகின்றனர். மொத்தமாக கொள்முதல் செய்வதால் வியாபாரிகளுக்கு குறைந்த விலையில் வழங்குகிறோம். அவர்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து லாபம் அடைகின்றனர் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>