தீர்த்தக்குட ஊர்வலம்

மேட்டூர், டிச.5:  மேட்டூர் காவேரி நகர் சக்தி  மாரியம்மன், சக்தி காளியம்மன் ஆலயங்களின் கும்பாபிஷேக விழா நாளை  (6ம் தேதி)  நடக்கிறது.  இதற்கான யாகசாலை பூஜைகள் நேற்று தொடங்கியது. விழாவையொட்டி  நேற்று காலை 7 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, புனிதநீர் வழிபாடு, பஞ்சபூத  வழிபாடு நடந்தது. தொடர்ந்து மேட்டூர் காவேரி பாலத்தில் இருந்து,  நூற்றுக்கணக்கான பக்தர்கள் புனிதநீர் எடுத்து கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். செண்டை மேளம் முழங்க குதிரைகள், யானைகள், ஒட்டகங்கள் அணிவகுத்து வர, அம்மன்  வேடம் அணிந்தவர்கள்  ஊர்வலமாக, மேட்டூர் நகரின் மூக்கிய வீதிகள் வழியாக  வந்தனர். அதை தொடர்ந்து, கோயிலில் சிறப்பு பூஜைக்கு பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: