×

வீரபாண்டி ஒன்றியத்தில் வேளாண் கலந்துரையாடல் நிகழ்ச்சி

ஆட்டையாம்பட்டி, டிச.5: வீரபாண்டி  ஒன்றியம் ஆட்டையாம்பட்டியில், அட்மா திட்டத்தின் கீழ் வேளாண்மை துறை  விஞ்ஞானி மற்றும் விரிவாக்க அலுவலர்கள், விவசாயிகளை சந்தித்து  கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், வேளாண் அறிவியல்  நிலைய தோட்டக்கலை உதவி பேராசிரியர் மாலதி கலந்துகொண்டு, விவசாயிகள்  பயிரிட்டுள்ள வெண்டை செடியில் காணப்பட்ட தத்துப்பூச்சி, வெள்ளை ஈக்கள்  மற்றும் காய்ப்புழு தாக்குதலில் அறிகுறிகள் குறித்து எடுத்துரைத்தார்.  மேலும், பூச்சிகளை தடுக்க விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை  பயன்படுத்தவும், தேவைக்கேற்ற உரங்களை பயன்படுத்தவும், ஒருங்கிணைத்த நீர்,  பூச்சி மேலாண்மை முறைகளை பயன்படுத்தி அதிக மகசூல் எடுக்கவும், மற்றும்  அதிக விலை கிடைக்கும் வழிமுறைகள் குறித்தும் அறிவுரைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில்,  வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜேந்திரன், உதவி தொழில்நுட்ப மேலாளர்  சரஸ்வதி மற்றும் முத்துசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Veerapandi Union ,
× RELATED வீரபாண்டி ஒன்றியத்தில் தென்னை சாகுபடி கருத்தரங்கம்