கல்லேரிப்பட்டி அரசு பள்ளியில் பொது அறிவு விழிப்புணர்வு முகாம்

ஆத்தூர், டிச.5: பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், கல்லேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான பொது அறிவு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு பள்ளியின் தலைமையாசிரியை அமுதா தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களை குறிக்கும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள் 37 என்ற எண் வடிவில் அமர்ந்து யோகாசனம் செய்து அசத்தினர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள்,  மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>