புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ₹3 லட்சம் நிதி

கெங்கவல்லி,  டிச.5:

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கெங்கவல்லி தாலுகா  நடுவலூர் கீழதெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி ஜானகி. இவர்  புற்றுநோயால் பாதிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏழ்மை நிலையில் உள்ள பெரியசாமி  குடும்பத்தாரிடம், மேற்படி மருத்துவ சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாததால்,  கள்ளக்குறிச்சி எம்பி கௌதம சிகாமணியிடம் பிரதமரின் நிவாரண நிதி  மூலம் மருத்துவ நிதியுதவி பெற்றுத்தர கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து  அவர் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஜானகிக்கு ₹3 லட்சம் நிதியுதவி பெற்றுத்தந்தார். ஜானகிக்கு மருத்துவமனையில் சிகிச்சை  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவ சிகிச்சைக்காக நிதியுதவி  பெற்றுத்தந்த எம்பி கௌதம சிகாமணிக்கு, பெரியசாமி குடும்பத்தினர் நன்றி  தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>