6 முதல் 9ம் வகுப்பு வரை 2ம் பருவ தேர்வு அட்டவணை வெளியீடு

திருப்பூர், டிச.5: திருப்பூர் மாவட்டத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, 2ம் பருவ தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.  அதன்படி 6ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 13ம் தேதி தமிழ், 16ம் தேதி ஆங்கிலம், 17ம் தேதி கணிதம், 19ம் தேதி அறிவியல். 20ம் தேதி உடற்கல்வி மற்றும் சுற்றுச்சூழல் கல்வி, 23ம் தேததி சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது.  8ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 13ம் தேதி தமிழ், 14ம் தேதி ஆங்கிலம், 17ம் தேதி கணிதம், 19ம் தேதி அறிவியல், 20ம் தேதி உடற்கல்வி மற்றும் சுற்றுச்சூழல் கல்வி, 23ம் தேதி சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது.  இந்த தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடக்கிறது. அதேபோல் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 12ம் தேதி தமிழ், 14ம் தேதி ஆங்கிலம், 17ம் தேதி கணிதம், 19ம் தேதி அறிவியல், 20ம் தேதி உடற்கல்வி மற்றும் சுற்றுச்சூழல் கல்வி, 23ம் தேதி சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது. 9ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 11ம் தேதி தமிழ், 13ம் தேதி ஆங்கிலம், 17ம் தேதி கணிதம், 19ம் தேதி அறிவியல், 20ம் தேதி உடற்கல்வி மற்றும் சுற்றுச்சூழல் கல்வி, 23ம் தேதி சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுகள் மதியம் 2 மணிக்கு தொடங்கி மாைல 4.30 மணி வரை நடக்கிறது. இந்த தகவலை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>