×

அரசு பள்ளியில் சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு

உடுமலை,  டிச. 5:  மடத்துக்குளம் அருகே உள்ள கடத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி.  இப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை மாணவர்கள் படித்து  வருகின்றனர். இப்பள்ளியின் கட்டிடம் கடந்த 2007ம் ஆண்டு திறக்கப்பட்ட  நிலையில், கடந்த 2ம் தேதி மதியம், உணவு இடைவேளையின்போது, 10ம் வகுப்பில்  மேற்கூரை சிமென்ட் காரை திடீரென பெயர்ந்து விழுந்தது. அந்நேரத்தில்  மாணவர்கள் சாப்பிட வெளியே சென்றதால் அசம்பாவித சம்பவும் எதுவும் நிகழவில்லை. தகவலின் பேரில், உடுமலை கல்வி மாவட்ட அலுவலர் பழனிச்சாமி நேரில்  சென்று வகுப்பறையை பார்வையிட்டார். தொடர்ந்து வகுப்பறை கட்டடத்தை சீரமைக்க  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதுகுறித்து பெற்றோர் கூறும்போது,  ‘‘ஏற்கனவே பலமுறை இந்த பள்ளியில் சிமென்ட் காரை இடிந்து விழுந்துள்ளது.  ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போதும் காலம் தாழ்த்தாமல் உடனடி  நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : collapse ,government school ,
× RELATED விருதுநகர் அருகே வீடு இடிந்து மூதாட்டி பலி