வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் புரோக்கர்கள் ஆதிக்கம்

உடுமலை,  டிச. 5: உடுமலையில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இங்கு  இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை பதிவு செய்யவும், ஓட்டுநர் உரிமம்,  பழகுநர் உரிமம், புதுப்பித்தல் உரிமம் பெறவும் தினசரி 300க்கும்  மேற்பட்டோர் வருகின்றனர்.இங்கு விண்ணப்பதாரர்களுக்கு போட்டோ எடுக்க நீண்ட நேரம் ஆவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இது குறித்து  பொதுமக்கள் கூறுகையில், ‘‘இங்கு புரோக்கர்களுக்குதான் முன்னுரிமை  கொடுக்கப்படுகிறது. தனியாக வந்தால் நீண்ட நேரம் காக்க வைக்கின்றனர். ஒரே  நாளில் உரிமம் வழங்கப்படும் என எழுதி வைத்துள்ளனர். ஆனால் மூன்று நாட்கள்  ஆகிறது.  புரோக்கர்களுக்கு உடனுக்குடன் பணி நடக்கிறது. இதை சம்பந்தப்பட்ட  அதிகாரிகள் கண்காணித்து தடுக்க வேண்டும்’ என்றனர்.

Advertising
Advertising

Related Stories: