×

உள்ளாட்சி தேர்தலையொட்டி கட்சி கொடி தயாரிக்கும் பணி தீவிரம்

திருப்பூர்,டிச.5: உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திருப்பூரில் கட்சி கொடிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.  தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வருகிற 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்காக அரசியல் கட்சிகளுக்கான கொடிகள், தொப்பிகள் தயாரிக்கும் பணி திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது இதற்கான ஆர்டர்களும் அதிகரித்துள்ளதால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர் உற்சாகமடைந்துள்ளனர்.   இதுகுறித்து, தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘உள்ளாட்சி தேர்தலுக்காக, அரசியல் கட்சிகளின் சின்னங்கள், தலைவர்களின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட டி-சர்ட்கள் மற்றும் கட்சி கொடிகள், தொப்பிகள் போன்றவற்றிற்கான ஆர்டர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து கொண்டிருக்கிறது. ஆர்டர்களின் பேரில் அனைத்தையும் தயாரித்து அனுப்பி கொண்டிருக்கிறோம். அ.தி.மு.க., தி.மு.க. பா.ஜ.க, கம்யூ. காங். அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சியினரிடம் இருந்து அதிகளவு ஆர்டர்கள் வந்துள்ளது. ஸ்கீரின் பிரிண்டிங் முறையில் இதனை தயாரித்து வருகிறோம். ஆர்டர்கள் அதிகமாக வருவதால் உற்சாகத்தில் உள்ளோம் என்றனர்.

Tags : party ,election ,
× RELATED பள்ளிகளில் தூய்மைப்பணி தீவிரம்