முன்விரோதம் காரணமாக தொழிலாளிக்கு கத்திக்குத்து

திருப்பூர், டிச. 5:  திருப்பூரில் முன் விரோதம் காரணமாக தொழிலாளியை கத்தியால் குத்தி நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.  திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள ஜெகநாதன் ஸ்பின்னிங் காம்பவுன்டை சேர்ந்த ஏழுமலை (28). அதேபோல் புஸ்பா நகரை சேர்ந்தவர் முகமது பாரூக்(38). இருவரும் சிப்ஸ் கடை ஒன்றில் தொழிலாளார்களாக பணியாற்றி வந்தனர். இந்நிலையில், முகமது பாரூக்கின் இரு சக்கர வாகனத்தின் சீட் கவரை கிழித்தது தொடர்பாக அவருக்கும் ஏழுமலைக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த முகமது பாரூக் கடையில் இருந்த கத்தியால் ஏழுமலையின் வயிற்றுப்பகுதியில் குத்தினார். இந்த சம்பவத்தில் ஏழுமலை பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர். ஏழுமலையை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஏழுமலை அளித்த புகாரின் பேரில், தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது பாரூக்கை கைது செய்தனர்.

Related Stories:

>