புனித சூசையப்பர் ஆலயத்தில் ரத்ததான முகாம்

திருப்பூர், டிச.5:  திருப்பூர், ‘முயற்சி’ மக்கள் அமைப்பு, உலக ரட்சகர் அன்பியம் ஆகியவை இணைந்து அரசு மருத்துவமனைக்கான ரத்ததான முகாம் நடத்தியது. இந்த முகாம் திருப்பூர், குமார் நகர் புனித சூசையப்பர் ஆலய வளாகத்தில் நடந்தது. முகாமிற்கு, ஆலய பங்கு தந்தை பிரான்சிஸ் ரொசாரியா, தலைமை வகித்தார். ஆரோக்கிய செல்வம், தொடங்கி வைத்தார். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை டாக்டர் தீபிகா, தலைமையில் மருத்துவ குழுவினர் 36 யூனிட் ரத்தம் சேகரித்தனர். முகாம் ஏற்பாடுகளை அமைப்பின் நிர்வாகிகள் ஜோசப், ராஜ், அருள்ராஜ், ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: