ஆயுதப்படை போலீசாருக்கு வாரத்தில் 4 நாட்கள் பரேடு பயிற்சி

திருப்பூர், டிச. 5: திருப்பூர் மாநகரில் பணியாற்றும் ஆயுதப்படை போலீசாருக்கு வாரத்தில் 4 நாட்களுக்கு பரேடு பயிற்சி நடத்த மாநகர போலீசார் திட்டமிட்டுள்ளனர்.  திருப்பூர் மாநகர ஆயுதப்படையில் சுமார் 350க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகின்றனர். அரசின் உத்தரவுபடி போலீசாருக்கு வாரம் 2 முறை பரேடு பயிற்சி நடக்கும். இந்நிலையில் திருப்பூர் மாநகரா ஆயுதப்படையில் புதியதாக 200 போலீசார் சேர்ந்துள்ளனர். இவர்கள் பணியில் சேர்ந்து 6 மாதம் மட்டும் பயிற்சி முடித்து விட்டு ஆயுதப்படைக்கு வந்துள்ளனர். இவர்களுக்கு போதிய பயிற்சி இல்லாததால் உயர் அதிகாரிகளிடம் நடந்து கொள்ளும் விதம், பணியிட நடைமுறை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது எழுந்துள்ளது. ஆயுதப்படை போலீசாருக்கு கூடுதலாக பயிற்சி அளிக்க காவல்துறை தலைமை உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் திங்கள், புதன், வெள்ளி, சனி ஆகிய 4 நாட்கள் காலை 6 முதல்  8 மணி வரை பரேடு பயிற்சி நடத்த மாநகர போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories:

>