இலவச வீட்டுமனைப் பட்டா கோரி தாராபுரம் தாலுகா அலுவலகம் முற்றுகை

தாராபுரம், டிச.5:  இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க கோரி விஸ்வகர்மா பிராமண மஹாஜன சங்கம் மற்றும் ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை அமைப்புகளின் சார்பில் தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடந்தது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வீட்டு மனைப்பட்ட கேட்டு மனு அளித்தனர்.  இதுகுறித்து முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது, ‘‘தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட கடைவீதி, உப்புத்துறைபாளையம், காந்திபுரம், அனுமந்தபுரம், கொழிஞ்சிவாடி, அண்ணாநகர், என்.என்.பேட்டை வீதி, பீம்மராயர் வீதி உள்ளிட்ட பகுதிகளில்  விஷ்வகர்மா பிரிவை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எங்களுக்கு அரசு வழங்கும் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கடந்த 2015ம் ஆண்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை அளித்தோம். ஆனால் எங்கள் கோரிக்கைகள் மீது இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே எங்களுக்கு அரசு உடனடியாக இலவச வீட்டுமனைப்பட்ட வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Advertising
Advertising

Related Stories: