×

லேம்ஸ்ராக் காட்சி முனை செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

குன்னூர்,டிச.5: குன்னூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 3 நாட்களாக பெய்த கன மழையால் பல்வேறு இடங்களில் மண் சரிவு மற்றும் பாறைகள் விழுந்து கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் குன்னூர் வரக்கூடிய சுற்றுலா பயணிகள் லேம்ஸ் ராக்  காட்சி முனை பகுதிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.  இந்நிலையில் தற்போது மழை குறைந்து கால நிலை மாறியுள்ளதால் சுற்றுலா பயணிகள் நேற்று முதல் காட்சி முனை பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். சுற்றுலா பயணிகள் காட்சி முனை பகுதியில் இருந்து இயற்கை காட்சிகளை கண்டுகளித்தனர். தற்போது சுற்றுலா பயணிகளும் கடை வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Lemisrack ,
× RELATED டாப்சிலிப்பில் பனி மூட்டம்: குளிரால் சுற்றுலா பயணிகள் அவதி