×

குன்னூர் அருகே பழங்குடியினர் கிராமங்களுக்கு செல்லும் சாலையில் ராட்சத பாறை, மண் சரிவு

குன்னூர், டிச.5:குன்னூரிலிந்து 25 கி.மீ. தொலைவில் ஆனைப்பள்ளம், சடையன் கொம்பை, சின்னாலக்கொம்பை உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் 40 ஆண்டுகால போராட்டத்திற்கு பின்பு இந்த பகுதியில் சாலையை சீரமைக்க 1.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தொடர்ந்து பெய்த கன மழையால் சாலை முழுமையாக அடித்து செல்லப்பட்டது. மேலும் பல இடங்களில் மண் சரிவு மற்றும் பாறைகள் விழுந்ததால் தற்போது சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றியுள்ள பழங்குடியின கிராம மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவும் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களை  6 கி.மீ. தொலைவு வரை சுமந்து செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த பகுதியில் கடந்த 3 நாட்களாக மக்கள் வெளியே வரமுடியாததால் அதிகாரிகள் ரேஷன் உள்ளிட்ட அத்யாவசிய  பொருட்களை பழங்குடியினர் வீடுகளுக்கு சென்று வழங்கி வந்தனர். தற்போது சிறிய அளவிலான வாகனங்கள் கூட செல்ல முடியாமல் சாலை முழுவதுமாக பாதிப்படைந்துள்ளது. இதனால் அடிப்படை பொருட்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அடித்து செல்லப்பட்ட சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழங்குடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,villages ,mud slope ,Coonoor ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...