துறையூர் அருகே மர்ம நபர்கள் துணிகரம் ஒரே நாளில் 5 வீடுகளில் நகை, பணம் திருட்டு

துறையூர், டிச.5: துறையூர் அருகே உள்ள கோட்டாத்தூர் கிராமத்தில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்த 5 வீடுகளில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கைவரிசை காட்டியுள்ளனர்.துறையூர் அருகே நேற்றிரவு கோட்டத்தூர் மணக்காட்டு தெருவை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் ஒரு பவுன் தோடு மற்றும் ரூ.5,000த்தை திருடி சென்றனர். பின்னர் அருகிலுள்ள சுப்பிரமணியன் வீட்டில் ரூ.1000, ரங்கசாமி வீட்டில் ரூ.500, பிச்சை வீட்டில் ரூ.1000, செல்போன், செல்வராஜ் வீட்டில் வெள்ளி கொடி, விசுவநாதன் வீட்டில் ரூ.1000, வெள்ளி குத்துவிளக்கு என மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 5 வீடுகளில் நடந்துள்ள இந்த திருட்டுச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>