×

பிப்ரவரியில் திருச்சியில் நடக்கிறது விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடலில் விளக்கம் காந்தி மார்க்கெட் பஸ் ஸ்டாப்பில் தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமிப்பு

திருச்சி, டிச.5: திருச்சி காந்தி மார்கெட் பகுதி தஞ்சை சாலையில் 6ம் நம்பர் கேட் வரையில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக காந்தி மார்க்கெட் பஸ் ஸ்டாப்பில் மாநகராட்சி அனுமதி பெற்ற கடைகளுக்கு முன்பாக மறித்தபடி தள்ளுவண்டி மற்றும் தரைகடைகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் செல்ல முடியாத நிலையுள்ளது. எனவே இடையூறு தரும் தள்ளுவண்டி மற்றும் தரைக்கடை வியாபாரிகளுக்கு வேறு இடம் வழங்கி மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Trichy ,
× RELATED விவசாயிகள் ஏமாற்றம் பிரம்மரிஷி...