கலெக்டர் தகவல் கடைவீதிகள், குடியிருப்புகளில் சேட்டை குரங்குகள் தொல்லை இந்திய கடற்படை இசைக்குழு கச்சேரி

திருச்சி, டிச.5: திருச்சியில் வரும் பிப்ரவரி மாதம் இந்திய கடற்படை இசைக்குழுவின் கச்சேரி நடக்க உள்ளது.திருச்சியில் இந்திய கடற்படையின் ராணுவ தளவாடங்கள் தரக்கட்டுப்பாட்டு அலுவலகம் செயல்படுகிறது. இங்கு நேற்று கடற்படை தினவிழா கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கிராபோர்டு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் 90 பேருக்கு நல உதவி வழங்கினர். இதனை இந்திய கடற்படை கமாண்டர் அனூப் தாமஸ் தலைமையில் லெப்டினென்ட் கமாண்டர் ஷ்ராய் பாண்டே முன்னிலையில் வழங்கப்பட்டது. தொடர்ந்து கடற்படை தினவிழா மற்றும் கடற்படையின் முக்கியத்துவன் பற்றி விளக்கப்பட்டது. தொடர்ந்து இந்திய கடற்படை இசைக்குழு கச்சேரி வரும் பிப்ரவரி மாதம் திருச்சியில் இயங்கி வரும் மத்திய அரசின் சில கல்வி நிறுவனங்களோடு இணைந்து நடத்த உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

Related Stories:

>