×

வனத்துறை நடவடிக்கை எடுக்குமா? உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனை கூட்டம் பதட்டமான வாக்குச்சாவடிகளில் கேமரா பொருத்தப்படும்

திருச்சி, டிச.5: திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரிதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.திருச்சி கலெக்டர் சிவராசு தலைமை வகித்து பேசியதாவது: மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாகவும், குளறுபடி, இடையூறு இல்லாமல் நடத்தப்படும். தேர்தல் கமிஷன் அறிவிப்பின்படி டிச.6 (நாளை) அனைத்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குமான வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இத்தேர்தலுக்காக பொதுத்தேர்தலை போன்று இல்லாமல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மனுத்தாக்கல் செய்யலாம். ஊராட்சித் தலைவர், மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு மட்டும் அந்தந்த ஊராட்சி அலுவலகங்களிலும் வேட்புமனுத் தாக்கல் செய்யலாம். எஸ்சி பிரிவினகருக்கான வார்டுகளில் போட்டியிட மனுத்தாக்கல் செய்பவர்கள், சாதிச்சான்றிதழ் வைத்துக்கொள்ள வேண்டும். 20 சதவீத வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுளளது. அவற்றில் கேமரா பொருத்தப்படும். மேலும் பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறிப்பட்டால் அங்கும் கேமரா பொருத்தப்படும். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களை அந்தந்த ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் தெரிவிக்கலாம். மேலும் தனி தொலைபேசி எண்கள் அறிவிக்கப்படும். அதிலும் புகார் தெரிவிக்கலாம். சுவர் விளம்பரம், பதாகை விளம்பரங்கள் எங்குமே செய்யக் கூடாது. திருச்சி மாவட்டத்தில் தேர்தல் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடைபெற அனைத்து அரசியல் கட்சியினரும், வேட்பாளர்களும் தேர்தல் கமிஷன் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் கலெக்டர் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பாஸ்கர், தேர்தல் தாசில்தார் முத்துசாமி, அதிமுக நிர்வாகிகள் முத்துக்கருப்பன், அழகேசன், திமுக வக்கீல் பாஸ்கர், கருப்பையா, கதிர்வேல், காங்கிரஸ் ராஜா நசீர், பாஜக காளீஸ்வரன், செந்தில் தீபக், இந்திய கம்யூ. திராவிடமணி, சுரேஷ், மார்க்சிஸ்ட் இந்துராஜா, சம்பத், தேசியவாத காங்கிரஸ் கோவிந்தராஜ், பகுஜன் சமாஜ் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.Tags : Forest Department ,election ,meeting ,
× RELATED வரத்து வாரிகளை வனத்துறை...