தா.பேட்டை மேற்கு பிரிவு மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்

தா.பேட்டை, டிச.5: தா.பேட்டையில் மேற்கு பிரிவு கிராமங்களுக்கு உட்பட்ட மின்வாரிய அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் புதிய அலுவலகத்தில் சேவை பெற பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து முசிறி மின்வாரிய செயற்பொறியாளர் ஹேமலதா விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மின்சார வாரியத்தின் சார்பில் தா.பேட்டை நடுவாணியர் தெருவில் இயங்கி வந்த மேற்கு பிரிவு மின்வாரிய அலுவலகத்தில் பைந்தம்பாறை, மகாதேவி ,ஆராய்ச்சி, மாணிக்கபுரம், தாண்டவம்பட்டி, சக்கம்பட்டி, வளையெடுப்பு, கிருஷ்ணாபுரம், மாவிலிபட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தவும் மற்றும் மின்சார சேவையை பெறவும் இந்த அலுவலகத்தை பயன்படுத்தி வந்தனர். நிர்வாக காரணத்தினால் தற்போது அந்த இடத்தில் இயங்கி வந்த மின் அலுவலகம் வடுகதெரு, அண்ணாநகர், தா.பேட்டை என்ற முகவரியில் கடந்த 1ம் தேதி முதல் செயல்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். எனவே பொதுமக்கள் மின்சார சேவைக்கு புதிய முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Related Stories:

>