×

விரைவில் பயன்பாட்டிற்கு வருமா? மக்கள் பயன்பாட்டுக்காக பிரதிபலன் எதிர்பாராமல் சேவையாற்றுவோம்

மன்னார்குடி, டிச.5: பேரிடர் காலங்கள் உள்ளிட்ட பல பிரச்னைகளின் போதும் மக்களின் மேம் பாட்டுக்காக எந்தப் பிரதிபலனும் இல்லாது மக்கள் ஆர்வமாக முன் வந்து தங்களால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்தெடு க்கும் நோக்கத்துடன் 1985ம் ஆண்டு ‘சர்வதேச தன்னார்வலர்கள் தினம்’ கொண்டாடப் பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5ம் தேதி தன்னார்வலர்கள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
தன்னார்வ சேவையை உலகம் முழுவதும் செய்ய வேண்டும். நாடுகள் பல் வேறு பிரச்சனைகளில் பாதிப்பு அடையும் போது பொருளாதார உதவி மற்றும் உணவு உதவிகளையும் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அதில் ஈடுபடும் தன்னார்வலர்களைப் பலப்படுத்தவும் ஊக்கப் படுத்தவும் இத்தினம் கொண்டாடப் படுகிறது.இதன் அடிப்படையில் புயல், வெள்ளம், பூகம்பம்.சுனாமி போன்ற இயற்கை பேரிடர் எத்தகையதாக இருந்தாலும் உலகின் எந்த நாடாக இருப்பினும் அரசின் கரங்கள் நீள்வதற்கு முன்னதாகவே தன்னார்வ நிறுவனங்கள் துயர் துடைப்பு பணிகளை தொடங்கி விடுகின்றன.உலகத்தின் எந்த மூலையில் வாழும் உயிர்க்கு ஒரு துன்பம் எனில் நாடு களின் எல்லைகளைத் தாண்டி இன மத மொழி வேறுபாடுகளைக் கடந்து பகை நாடாக இருப்பினும் தேவையான உதவிகளை செய்வதில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்னணியில் இருக்கின்றன.

இயற்கை பேரிடர் மட்டுமின்றி செயற்கை யான நெருக்கடி காலங்களில் கூட தன்னார்வ சேவை நிறுவனங்கள் தொண்டாற்றி வருகின்றன. திருவிழா கால ங்களில் தண்ணீர் பந்தல் அமைப்பது தொற்று நோய்கள் பரவும் நேரத்தில் நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்துவது உட்பட பல்வேறு பணிகளை பட்டியலிடலாம். மக்கள் சேவையே மகேசன் சேவை. என் கடன் பணி செய்து கிடப்பதே என்கிற முதுமொழிகளுக்கு ஏற்ப தொண்டாற்றி வரும் தொண்டு நிறுவனங்களின் பணி மிகவும் பாராட்டுதலுக்குரியது.
இந்நிலையில் 34 வது சர்வதேச தன்னார்வலர்கள் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அதுகுறித்து திருவாரூர் மாவட்ட நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜப்பா கூறு கையில், இயல்பான நேரங்களில் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் மேம்பட பல்வேறு செயல்பாடுகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசுக்கு இணையாக செய்து வருகின்றன. அரசின் நல்வாழ்வு திட்டங்கள் பல இருப்பினும் ஒரு சில கட்டுப்பாடுகளாலும் நடைமுறை இடர்பாடுகளினாலும் முழுமையாக பலன்கள் பயனாளிகளுக்கு போய் சேருவதில் காலதாமதமாக சென்று சேர்கின்றன. ஆனால் இதுவே தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மிக சுலபமாக எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி சரியான நேரத்தில் திட்டங் களின் பயன்பாடுகள் பயனாளிகளுக்கு செல்ல வழிவகுத்து வெற்றி பெறு கின்றன.உலகளாவிய அளவில் தொண்டாற்றி வரும் ரோட்டரி சங்கத்தின் பெரும் பொருட்செலவாலும் சிறப்பான திட்டமிடுதலாலும் உலகளவில் போலியோ என்னும் இளம்பிள்ளை வாதம் என்கிற கொடிய நோயை அறவே வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்க முடிந்தது என்பதே தன்னார்வ தொண்டு நிறு வனங்கள் செயல் பாட்டிற்கு ஓர் எடுத்துக் காட்டாகும்.அதேபோல் அரிமா சங்கம் உலகம் முழுவதும் கண்பார்வை கிடைக்கப் பெறும் வகையில் இலவச கண் சிகிச்சை முகாம்களை இலட்சக்கணக்கில் நடத்தியும் கண் தானத்தினை ஊக்குவித்தும் வெற்றி பாதையில் பயணித்து வருகிறது.

இது போல் எண்ணிலடங்கா நற்பணி மன்றங்கள், சமுதாய அமைப்புகள், பொது நல அமைப்புகள் உலகம் முழுவதும் கணக்கிடலங்காத சேவை திட்ட ங்களை உள்ளூர் அளவிலும் உலகம் முழுவதுமாகவும் செவ்வனே செய லாற்றி வருகின்றன.இத்தகைய ஊருக்கு உழைத்திடும் நற்பண்புகளை, மனித நேயத்தை, பொது நல சிந்தனைகளை, சுயநலமின்றி பொது நோக்கத்தோடு செயல்படும் உயர்ந்த குணங்களை, கல்வி நிலையங்களிலிருந்து சிறுவயது முதலே வளர்த்திடும் வண்ணம் நாட்டு நலப்பணித்திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம், சாரணர் இயக்கம் போன்ற பற்பல இயக்கங்கள் செயலாற்றி வருகின்றன. இவற்றில் ஏதாவதொரு ஒரு அமைப்பில் சேர்ந்து பயிற்சி பெறும் மாணவ மாணவிகள் பின்னர் தன் வாழ்நாளில் சமூக அக்கறை கொண்ட மனிதர்களாக திகழ் கின்றனர்எனவே இந்த நன்னாளில் தன்னார்வலர்களை ஊக்கப்படுத்துவோம். பாராட் டுவோம். தொண்டு நிறுவன செயல்பாடுகளுக்கு துணை நிற்போம் ஒத்துழைப்பு நல்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.இன்று சர்வதேச தன்னார்வலர்கள் தினம்புயல், வெள்ளம், பூகம்பம்.சுனாமி போன்ற இயற்கை பேரிடர் எத்தகையதாக இருந்தாலும் உலகின் எந்த நாடாக இருப்பினும் அரசின் கரங்கள் நீள்வதற்கு முன்னதாகவே தன்னார்வ நிறுவனங்கள் துயர் துடைப்பு பணிகளை தொடங்கி விடுகின்றன.


Tags : public ,
× RELATED வடலூரில் மூடிக்கிடக்கும் உழவர்...