×

மழைக்கு ஓழுகும் பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப மாட்டோம் அன்னூர்,டிச.5: கோவை மாவட்டம் அன்னூர், நல்லிசெட்டிபாளையத்தில்

அரசு துவக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் சுமார் 30 மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். ஓடுகளால் வேயப்பட்ட கூரைகளை கொண்ட இப்பள்ளி மழைகாலத்தில் ஓடுகளின் வழியே மழைநீர் வகுப்பறைகளுக்குள் புகுந்து வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. மேலும் மழைநீர் ஓழுகுவதன் காரணமாக வகுப்பறைகளின் சுவர்கள் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் இங்கு படிக்கும் மாணவர்கள் உயிருக்கு பயந்து படிக்கும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பெற்றோர்கள் பலமுறை புகார் மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் அசம்பாவித சம்பவங்கள் நிகழும் முன்பாக பள்ளியை சீரமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால்  வரும் திங்கட்கிழமை முதல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப போவதில்லை என பெற்றோர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

Tags : school ,Annur ,Coimbatore district ,Nallisettipalayam ,
× RELATED அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக்...