×

முத்துப்பேட்டை பேரூராட்சியில் ஓரங்கட்டப்பட்ட புதிய பேட்டரி ஆட்டோக்கள்

முத்துப்பேட்டை, டிச.5: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் சமீபகாலமாக அதிகளவில் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்க்கேட்டை ஏற்படுத்தி வந்தது. இந்தநிலையில் சென்ற மாதம் பேரூராட்சி புதிய செயல் அலுவலராக வந்த தேவராஜ் அதிரடி நடவடிக்கைகள் மேற்க்கொண்டு சாலையில் குப்பைகள் கொட்டுபவர்களுக்கு அபராதம் விதித்தார். இருந்தும் சாலையில் குப்பைகள் கொட்டுவதை நிறுத்தாமல் ஆங்காங்கே கொட்டி வருவதால் அடுத்தக்கட்டமாக அபராதம் தொகையை கூடுதலாக வசூல் செய்தும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக செயல் அலுவலர் தெரிவித்து வருகிறார்.

இந்த நடவடிக்கைகள் மெயின் சாலைகள் முக்கிய சாலைகள் ஆகியவை மட்டுமே கட்டுப்படுத்த முடிகிறது. ஆனால் குறுகிய சந்து, தெருக்களில் குப்பைகளை சென்று அல்ல பேரூராட்சி குப்பை லாரி, டிராக்டர்கள் செல்ல முடிவதில்லை. அதனால் அப்பகுதியில் குப்பைகளை எடுத்து வர மிகவும் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பேரூராட்சி சார்பில் பொது நிதியிலிருந்து குப்பைகள் சேகரித்து அள்ளிவர பேட்டரியில் இயங்கும் பேட்டரி ஆட்டோ தலா ரூ.1.80லட்சம் வீதம் மொத்தம் 3.60 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு வாங்கப்பட்டது. வாங்கி வரவழைக்கப்பட்ட இந்த பேட்டரி ஆட்டோ அன்று முதல் இன்று வரை செயல்படாமல் வளாகத்தில் மூன்று மதமாக ஓரங்கட்டப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் மூலம் சந்து மற்றும் குறிகிய பகுதியில் ரொம்ப ஈசியாக குப்பைகளை அகற்றி கொண்டு வர மிகவும் பயனாக இருக்கும் இதன் மூலம் அப்பகுதியில் குப்பைகள் சேருவதை தவிர்க்கலாம். இந்த வாகனம் பயன்பாட்டிற்கு வராததால் நாளுக்குநாள் வீணாகி வருகிறது. தற்பொழுது பருவமழை பெய்து வருவதால் தொடர்ச்சியாக மழை நீரில் பேட்டரி ஆட்டோ வீணாகி வருகிறது. இதன் மூலம் இந்த வாகனம் முழுவதும் பயன்பாட்டிற்கு வராமலே வீணாக வாய்ப்புகள் உள்ளது.ஆகவே புதியதாக பொறுப்பேற்றுள்ள பேரூராட்சி செயல் அலுவலர் இந்த பேட்டரி ஆட்டோ வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Muthupettai ,barracks ,
× RELATED திருவாரூர் முத்துப்பேட்டை இலவச...