×

மன்னார்குடி டிஎஸ்பி பேச்சு முதல், 2ம் கட்ட அறிவிப்பு வெளியிடாததால் மனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் குழப்பம்

திருவாரூர், டிச.5: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் என்பது 3 ஆண்டு காலத்திற்கு பின்னர் கடந்த 2 ம் தேதி மாநில தேர்தல் ஆணையத்தின் மூலம் திடீரென அறிவிக்கப்பட்டது.  இது அரசியல் கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் இருந்து வரும் 388 ஊராட்சி ஒன்றியங்கள் இரு கட்டங்களாக தேர்தல் நடத்துவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வரும் 27ம் தேதி முதல் கட்டமும், 30ம் தேதி 2ம் கட்டமாகவும் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்தலுக்கான வேட்பாளர்கள் டெபாசிட் தொகை, செலவுத்தொகை மற்றும் வாக்கு சீட்டுக்கான வண்ணங்கள் போன்றவை அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான தேதியும் (நாளை 6 ந் தேதி) அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் இதற்கான வேட்புமனு தாக்கலானது மாநிலம் முழுவதும் துவங்குகிறது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் ,மன்னார்குடி ,நீடாமங்கலம், வலங்கைமான், குடவாசல், நன்னிலம் மற்றும் கொரடாச்சேரி என மொத்தம் 10 ஒன்றியங்கள் இருந்து வரும் நிலையில் இதில் எந்தெந்த ஒன்றியங்களுக்கு முதல் கட்ட தேர்தல், எந்தெந்த ஒன்றியங்களுக்கு 2ம் கட்ட தேர்தல் என இதுவரையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இது அரசியல் கட்சியினர் இடையே பெரும் ஏமாற்றத்தினையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக தங்களது பகுதிகளில் சுவர் விளம்பரங்கள் செய்வது மற்றும் வாக்காளர் இடையே தேதியை குறிப்பிட்டு வாக்கு சேகரிப்பது மற்றும் சின்னம் பொறித்த துண்டு சீட்டுகள் அடிப்பது போன்ற பணிகள் நடைபெறாமல் இருந்து வருவதால் உடனே இதுகுறித்த அறிவிப்பினை வெளியிட வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Mannargudi DSP ,phase ,
× RELATED தேர்தலில் தீவிரமாக பணியாற்றினால் வெற்றி உறுதி: முதல்வர் பழனிசாமி பேச்சு