மாநகராட்சி பணிகளில் வெளிநபர் தலையிட அனுமதி அளிக்கக்கூடாது

கோவை, டிச. 5:கோவை மாநகராட்சி பணிகளில் வெளிநபர் தலையிட அனுமதி அளிக்க கூடாது என கார்த்திக் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ. கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கோவை  குனியமுத்தூரில் கடந்த 28.11.2019 அன்று ரூ.7.41 கோடி மதிப்பில்  கட்டப்பட்ட மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலக புதிய கட்டிடம் திறப்பு விழா  நடந்தது. இதில், மாநகராட்சிக்கு சம்பந்தம் இல்லாத, மக்கள் பிரதிநிதியாக  இல்லாத ஒரு சமூக ஆர்வலர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கு  ஏற்றி, விழாவை துவக்கி வைத்துள்ளார் . இவர், அரசுப்பணிகளில்  அத்துமீறி தலையிட்டு மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆணைகளை  பிறப்பிக்கிறார்.  எந்த ஒரு அரசு பதவியிலும் இல்லாமல், மக்களின் பிரதிநிதியாகவும் இல்லாமல்,  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தை தங்கள் கையில்  எடுத்துக்கொள்ளும் இந்த அரசியல் சட்டவிரோத முயற்சிக்கு கோவை மாநகர் மாவட்ட  தி.மு.க. கடும் கண்டனம் தெரிவிக்கிறது. அரசு நிர்வாகத்தில் ஒரு தனி நபர்  தலையிடுவது எந்த விதத்திலும் ஏற்க முடியாது. இனியும் இதுபோன்ற நிகழ்வு  தொடர்ந்தால் மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு கார்த்திக் எம்.எல்.ஏ. கூறினார்.

Related Stories: