×

விழிப்புணர்வில் வேண்டுகோள் சிசிடிவி கேமரா அதிகரிப்பால் குற்றங்களின் எண்ணிக்கை வேகமாக குறையும்

மன்னார்குடி, டிச.5: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் நகைக்கடை வியாபாரிகள் டாஸ்மாக் பணியாளர்களுக்கான குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்தான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு தலைமை வகித்து டிஎஸ்பி கார்த்திக் பேசுகையில்,கண்காணிப்பு காமிராவினால் பல்வேறு பயன்கள் கிடைக்கின்றன. கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க குற்றங்களின் எண்ணி க்கை வேகமாக குறையும். நகை கடை, டாஸ்மாக் கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் குற்றங்களை குறைக்கும் வகையிலும், குற்றவாளிகளை அடை யாளம் கண்டறிந்து கைது செய்யும் வகையிலும் கண்காணிப்பு காமிராக் களைப் அதிக அளவில் பொருத்த வேண்டும்.டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் விற்பனை மூலம் வரும் பணத்தை எடுத்து செல்லும் போது எக்காரணம் கொண்டும் தனியாக செல்லக் கூடாது. பாதுகாப்பிற்காக கூடுதலாக ஆட்களை அழைத்து செல்ல வேண்டும். சந்தேகப்படும் வகையில் எவரேனும் பின் தொடர்ந்தால் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும்.நகைக்கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரியும் நபர்களை கண்டால் உடனே காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்க வேண்டும்.

இரவு நேரங்களில் நகை கடைகள் மற்றும் டாஸ்மாக் கடைகள் முன் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு அனுமதிக்க கூடாது. கட்டிடங்களில் பாதுகாப்பு அம்சங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.நகைக்கடைகளில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு   கேமராக்களின் பதிவு களை நீண்ட காலம் அழியாமல் வைத்திருக்கும் அளவிற்கு ஸ்டோரேஜ் ஏற்படுத்துங்கள். அதற்கான நிறைய வழிமுறைகள் தற்போது வந்துவிட்டன. குற்றங்களைத் தடுக்கும் பொறுப்பு போலீசாருக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் உள்ளது. அதனை உணர்ந்து வியாபாரிகள் தங்கள் கடைகளில் உள்புறம், வெளிப்புறம் மற்றும் பின்புறங்களில் தேவையான அளவு கண் காணிப்பு  கேமராக்களை பொருத்த வேண்டும் என்றார்.கூட்டத்தில் மன்னார்குடி நகைக்கடை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் கணேசன், செயலாளர் உத்திராபதி, பொருளாளர் வெங்கடேஷ். முன்னாள் தலைவர் ராஜேந்திரன் மற்றும் டாஸ்மாக் கடைகளின் பணியாளர்கள் என 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


Tags :
× RELATED வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர்...