×

அதிகாரிகள் அலட்சியம் மக்களை அச்சுறுத்தும் தென்னை மரம் அப்புறப்படுத்த கோரிக்கை

முத்துப்பேட்டை, டிச.5: முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் கடைத்தெருவிற்கு முன்பு கிழக்கு கடற்கரை சாலையில் ஏராளமான கடைகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இந்தநிலையில் சாலையோரம் உள்ள ஒரு குடியிருப்பில் உள்ள தென்னை மரம் கஜா புயலின்போது பாதிக்கப்பட்டு சாய்ந்த நிலையில் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த சாய்ந்த தென்னை மரத்தை ஒட்டி மின் கம்பிகள் செல்கிறது. கிழக்கு கடற்க்கரை சாலை என்பதால் இந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் தினந்தோறும் அதிகளவில் சென்று வருகிறது. வாகனங்கள் செல்லும்போது இந்த ஆபத்தான தென்னை மரமும் அதிர்வு ஏற்பட்டு ஆடுகிறது.இதனால் அப்பகுதியை கடந்து செல்லும் மக்களுக்கும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். ஆகவே இனியும் காலதாமதம் ஏற்படுத்தாமல் உடனே சாய்ந்த நிலையில் உள்ள தென்னை மரத்தை அகற்ற உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : removal ,
× RELATED வேதாரண்யம் அருகே பட்டுப்போன தென்னை மரம் விழுந்து ஓட்டு வீடு சேதம்